பரம எருசலமே
Parama Erusalamae
பரம எருசலமே
பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய்
அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா – 4
– பரம எருசலமே
எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய் பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன்
கனிவான எருசலேமே
கனிவான எருசலேமே (2)
– பரம எருசலமே
ஜீவ தேவன் நகரினில் குடி புகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்கு சொந்தமானேன்
நீதி தேவன் நிழலடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன்
மேலான எருசலேமே
மேலான எருசலேமே(2)
– பரம எருசலமே
சர்வ சங்க சபையினில் அங்கமானேன்
சர்வ லோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்குக் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாம் தூதர்கள் சூழ நின்றேன்
ஆஹா என் எருசலேமே
ஆஹா என் எருசலேமே (2)
– பரம எருசலமே
விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானே என்னும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் என்னில் வாழ்வதால் விடுதலையே
சுயாதீன எருசலேமே
சுயாதீன எருசலேமே (2)
– பரம எருசலமே