நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரலோகில் வாழும் கூட்டம் என்ன கூட்டம்

Paralokil Vaalum Koottam Enna Koottam

Moses Rajasekar

பரலோகில் வாழும் கூட்டம்

என்ன கூட்டம் – தேவ

பரமனையே போற்றிப் பாடும்

பக்கதர் கூட்டம்

அல்லேலூயா அல்லேலூயா என்ற

ஆடியே பாடும் கூட்டம்

அப்பன் இயேசு பக்கத்திலே

நின்றிடும் பக்தர் கூட்டம்

அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – ஆமென்

அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – 2

இருபத்து நான்கு மூப்பர்

சூழ்ந்த கூட்டம் – என்றும்

சிரம் தாழ்த்தி தேவனையே பணியும் கூட்டம்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் கூட்டம்

ஓயாமல் சொல்லிப் பாடும்

தூதர் கூட்டம் – அம்மா

– பரலோகில்

ஆட்டுக்கு குட்டியானவரின்

இரத்தத்தாலே தம்மை

தோய்த்து வெளுத்த பரிசுத்தர் கூட்டம்

குருத்தோலை தங்கள் கையில் ஏந்திக் கொண்ட

ஓசன்ன்னா சொல்லிப் பாடும்

பக்தர் கூட்டம் – இயேசுவுக்கு

– பரலோகில்

மரித்தவர் முன்னோராக

எழுத்திருக்க – பின்பு

உயிரோடிருக்கும் நாமும் பறந்து செல்ல

தூதர் கண்களோடு வானில் தோன்றி – நம்மை

தம்மோடு சேர்க்கும் இயேசு

ராஜா கூட்டம்

– பரலோகில்