நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரலோக ராஜ்ஜிய வாசி

Paraloka Raajjiya Vaasi

பரலோக ராஜ்ஜிய வாசி

பரன் இயேசுவின் மெய் விசுவாசி

புவி யாத்திரை செய் பரதேசி

பரன் பாதன் நீ மிக நேசி

ஆபிரகாம் ஈசாக்குடனே

ஆதி பிதாக்கள் யாவருமே

தேவனுண்டாகின மெய் ஸ்தலமே

தேடியே நாடியே சென்றனரே

அந்நியரே பரதேசிகளே

– பரலோக ராஜ்ஜிய வாசி

திரும்பியே பாரோம் மறந்த தேசம்

தீவிரம் செல்வோம் சுய தேசம்

தூதர்கள் வாழும் பரம தேசம்

தூய பிதா ஒளி வீசும் தேசம்

மேலோக பக்தரின் சொந்த தேசம்

– பரலோக ராஜ்ஜிய வாசி

தனித்தனியே யாத்திரை செல்லுவோம்

கூட்டங்களாக திரண்டு செல்வோம்

குடும்பம் குடும்பமாகச் செல்வோம்

ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்

சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம்

– பரலோக ராஜ்ஜிய வாசி

நன்மையும் மேன்மையும் நகரம்

நல் அஸ்திபார புது நகரம்

வாக்குத் தத்தத்தின் திட நகரம்

விசுவாசத்தால் அடையும் நகரம்

ஏறுகின்றோம் சீயோன் சிகரம்

– பரலோக ராஜ்ஜிய வாசி

வெண் வஸ்திர பவனி நடக்க

வெண் குருத்தோலை கொடி பறக்க

பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க

பெரு வெள்ளம் ஓசைப் பாட்டொலிக்க

கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க

– பரலோக ராஜ்ஜிய வாசி