நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பலத்தினாலும் அல்ல பரக்கிரமும் அல்ல

Palaththinaalum Alla Parakkiramum Alla

Pastor K. S. Wilson

பலத்தினாலும் அல்ல பரக்கிரமும் அல்ல

ஆவியினால் எல்லாம் ஆகும்

செங்கடலை கடந்திடுவோம்

எரிகோவை தகர்த்திடுவோம்

கால் மிதிக்கும் தேசம் சுதந்தரிப்போம்

ஜெயத்தின் மேலே ஜெயம் எடுப்போம்

துக்கத்தில் என் ஆறுதல் அவர்

துன்பத்தில் துணை அவரே

பக்கத்திலே ஆயிரம் பேர் இருந்தாலும்

பாதுகாக்கும் துணை அவரே

விழித்தெழு விசுவாசியே

ஒற்றுமையாய் செயல்படுவோம்

மகிமையான ஊழியம் தந்திடுவார்

மகிழ்ச்சியோடு ஆராதிப்போம்

பயப்படாதே விசுவாசியே

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

வெண்கல கதவுகளை உடைத்திடுவார்

பொக்கிஷங்கள் தந்திடுவார்

ஆவியினால் பெலனடைவோம்

இலக்கை நோக்கி ஓடிடுவோம்

மணவாட்டி சபையே ஆயத்தப்படு

மணவாளன் வருகின்றார்