பாடல்
பலத்தினாலும் அல்ல
Palaththinaalum Alla
Moses Rajasekar
பலத்தினாலும் அல்ல
பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2
கிரியையினால் அல்ல மனித
செயல்களினால் அல்ல – 2
தேவ கிருபையினால் எல்லாம் ஆகும்
ஆற்றல் அல்ல சக்தி அல்லவே
பணம் அல்ல புகழ் அல்லவே
பெருமையினால் அல்ல
உன் அறிவினாலும் அல்ல தேவ
ஆவியினால் எல்லாம் ஆகும் – 2
– பலத்தினாலும்
மனித யோசனைகள் ஜெயித்ததில்லை அவன்
திட்டங்களும் பலித்ததும் இல்லை – 2
நான் என்ற அகம்பாவம் வெற்றிபெற்றதில்லை
தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2
– பலத்தினாலும்
கர்த்தருடைய கரம் இருந்தால் – நீ
செய்வது எல்லாம் வாய்க்கும் – 2
நல்லவழிகள் பிறக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும்
உன் சுக வாழ்வு நிலைத்திருக்கும் – 2
– பலத்தினாலும்