நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பேசுங்கப்பா எங்களொடு பேசுங்கப்பா

Paesungappaa Engalodu Paesungappaa

Lucas Sekar

பேசுங்கப்பா எங்களொடு பேசுங்கப்பா

நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும் – (2)

துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா

உம் நாமம் உயர்த்தணும்பா

உம் நாமம் உயர்த்தணும்பா

– பேசுங்கப்பா

பகல் முழுவதும் உங்க பாதபடியில்

என் கண்ணீர வடிக்கணும்பா (2)

இரா முழுவதும் தியானம் செய்து

பாக்கியவானாய் மாற்றுங்கப்பா

பாக்கியவானாய் மாற்றுங்கப்பா

– துதிக்கணும்பா

ஒவ்வொரு நாளும் பெலனடைந்து

ஆவியில நிறையணும்பா (2)

பெலத்தின்மே பெலனடைந்து

சீயோன பார்க்கணும்பா

சீயோன பார்க்கணும்பா

– துதிக்கணும்பா

பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள

தேவாதி தேவன் நீரே (2)

பரிசுத்தமாய் வாழ்ந்திடவே

உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா

உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா

– துதிக்கணும்ப்பா

உண்மையான ஊழியனாய்

அனுதினமும் விளங்குகணும்பா

நன்மைகள் செய்யணுமே

நாள்தோறும் உம்ம பார்க்கணுமே

நாள்தோறும் உம்ம பார்க்கணுமே

– துதிக்கணும்ப்பா