பாடல்
பாவியாகிய எந்தன் மேல்
Paaviyaakiya Enthan Mael
Chandrasekaran
பாவியாகிய எந்தன் மேல்
இரக்கம் காட்டுங்க
இறங்கி வாருங்க
உம் சமூகம் தேடி ஓடி வருகின்றேன்
என் கண்களை ஏறெடுக்க
துணியாமல்
வெட்கத்தோடு
தலைகுனிந்து தவிக்கிறேன்
என் கைகளை ஏறெடுக்க துணியாமல்
தூரமாக துக்கத்தோட நிற்கின்றேன்
– இரக்கம்
உம் பிள்ளைகள் போல
சுதந்திரமாய்
உலகில் வாழ
முடியாமல் பாவத்தோடு நிற்கிறேன்
உம் பிள்ளைகளோடு இணைந்து
உம்மை ஆராதிக்க
வாஞ்சை இருந்தும்
முடியாமல் தவிக்கிறேன்
– இரக்கம்
நான் ஆயக்காரனாய் இருந்தாலும்
நீர் என்னை உண்டாக்கிய
தேவன் ஒருவரே எனக்காகவே
இயேசுவையே அனுப்பினீர்
என் பாவம் நீக்கிப்
புது வாழ்வை தாரும்
– இரக்கம்