பாடல்
பாவமில்லாத ஆட்டுக்குட்டி
Paavamillaatha Aattukkutti
Sirkali Yesuprakasam
பாவமில்லாத ஆட்டுக்குட்டி
பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
பாதம் இடறி பாதை தவறி பதறிப்
பயணம் போவதெங்கே
பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
பரமனும் பாதகர் நடுவில் நின்று
பால் மறவாத பாலனைப் போல
வாய் திறவாமல் போனதென்ன
– பாவமில்லாத
குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
குருசினில் ஓடுவதேன் பாராய்
உருகலையோ உன் மனமே
உணர்வில்லையோ உன் கல் மனமே
– பாவமில்லாத