பாடல்
பாவம் போக்கும் நதி ஜீவ தேவ நதி
Paavam Pokkum Nathi Jeeva Thaeva Nathi
Lucas Sekar
பாவம் போக்கும் நதி
ஜீவ தேவ நதி
பாவங்கள் சாபங்கள்
யாவையும் நீக்கி
சுத்திகரிக்கும் நதி (2)
பாவத்திற்கு மரித்து
நீதிக்கு பிழைக்கச் செய்தீர் (2)
பாரினில் வந்தீரைய்யா எங்கள்
பாவங்கள் போக்கிடவே (2)
– பாவம்
இயேசைய்யா உம் இரத்தம் எங்கள்
பாவங்கள் போக்கிடுதே (2)
நித்திய ஜீவன் பெற
சுத்திகரிக்குதைய்யா (2)
– பாவம்
வறண்ட நிலத்திலே நீர்
ஆறுகள் உண்டாக்குவீர் (2)
தாகமுள்ளவனுக்கு
ஜீவத்தண்ணீர் கொடுப்பீர் (2)
– பாவம்
கன்மலையிலிருந்து நீர்
தண்ணீரை வரவழைத்தீர் (2)
கசந்த மாராவை
மதுரமாய் மாற்றிடுவீர் (2)
– பாவம்