நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாடித்துதி மனமே பரனைக்

Paatiththuthi Manamae Paranaik

பாடித்துதி மனமே பரனைக்

கொண்டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை

நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுற

செப்பின தேவபரன இந்தக் காலத்தில்

மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு

விளக்கின அன்பை விழைந்து தியானித்து

– பாடித்துதி

சொந்த ஜனமான யூதரைத் தள்ளி

தொலையில் கிடந்த புற மாந்தராம் எமை

மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை

மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காக

– பாடித்துதி

எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்

எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்

எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு

இத்தனையாய் கிருபை வைத்து நம் கர்த்தனை

– பாடித்துதி