நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பார்வோனே எங்களை போகவிடு

Paarvonae Engalai Pokavidu

Moses Rajasekar

பார்வோனே எங்களை போகவிடு

நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள்

பார்வோனே எங்களை போகவிடு

நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்

எகிப்தின் அடிமைதனம் வேண்டாம் (2)

கானானை சுதந்தரிக்க வேண்டும் – நாங்கள் (2) –

செங்கடலை பிளந்திட வேண்டும்

எரிகோவை உடைத்திட வேண்டும் – நாங்கள் (2)

ஆயியை பிடித்திட வேண்டும் (2)

கர்த்தர் நாமம் உயர்த்திட வேண்டும் – நாங்கள் (2)

– எகிப்தின்

பாலும் தேனும் ஓடுகின்ற தேசம்

நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும் (2)

ஏலீமின் நீருற்றில் நனைந்து (2)

எங்கள் தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டும் (2)

– எகிப்தின்

அழுமையின் பள்ளத்தில் கிடந்து

நாங்கள் அழுது புலம்பினது போதும் (2)

எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து (2)

வெற்றி கொடி நாட்டிட வேண்டும் (2)

– எகிப்தின்