பாடல்
பார்க்க கூடாத இடத்தை
Paarkka Koodaatha Idaththai
Chandrasekaran
பார்க்க கூடாத இடத்தை
நான் பார்க்கிறேன்
நிற்க கூடாத இடத்தில்
நான் நிற்கிறேன்
செய்யக்கூடாத காரியத்தை
செய்கிறேன்
தேவனே கிருபையால்
என்னை தாங்கிடும் – 2
யாரை நான் பிரியப்படுத்துவேன்
மனுஷரையா என் இயேசுவையா?
இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால்
தேவனோடு வாழக்கூடுமோ – 2
– பார்க்க கூடாத
யாருக்காக சேவை செய்வேன்
உலகத்துக்கா தேவ ராஜ்யத்திற்கா
இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே
நீரே நித்தியமானவர்
– பார்க்க கூடாத
யாரை நான் நம்பி வாழ்வேன்
மனுஷரையா என் இயேசுவையா
எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை
எப்படி மறந்து வாழ்வேன்
– பார்க்க கூடாத