பாரமில்லையா பாரமில்லையா
Paaramillaiyaa Paaramillaiyaa
Lucas Sekar
பாரமில்லையா பாரமில்லையா
தேசம் அழிகின்றது
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
என்ற சத்தம் தொனிக்கின்றது
கிருபை வாசல் அடைகிறதே
நியாயத் தீர்ப்பு நெருங்கிடுதே
இந்த நாளில் மௌனமாயிருந்தால்
அழிவு என்பது நிச்சயமே (2)
சேனையாய் எழும்புவோம் யுத்தகளத்தில் (2)
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே புறப்படுவோம்
அழியும் கோடி மாந்தரை மீட்க
இன்றே ஜெபித்திடுவோம்
எங்கள் பாரதம், எங்கள் பாரதம்
இயேசுவின் பாரதம்
எங்கள் பாரதம், எங்கள் பாரதம்
இயேசுவின் பாரதம்(4)
திறப்பில் நின்று சுவரை அடைக்க
தேவன் தேடும் மனிதன் எங்கே (2)
கண்ணீர் சிந்த ஆளில்லை
கதறி ஜெபிக்க ஆளில்லை (2)
யாரை அனுப்புவேன்
யாரை அனுப்புவேன் (2)
என்ற சத்தம் தொனிக்கின்றதே (2)
– சேனையாய்
அறுவடையின் காலமெல்லாம்
முடங்கி கிடப்பது நியாயம் தானா (2)
பாதங்கள் வெண்கலமாகும்
இடைவிடாமல் போரடி (2)
வாயில் துதியும்
கையில் பட்டயம்
எழுந்து நின்று போரடிப்போம் (2)
– சேனையாய்