பாடல்
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
Paakkiyavaankal Paakkiyavaankal
Moses Rajasekar
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
இயேசுவின் சமூகத்தில் பாக்கியவான்கள் – 2
ஆவியில் எளிமையுள்ளவர்கள்
பாக்கியவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது – 2
துயரபடுகிறார்கள் பாக்கியவான்கள்
அவர்கள் ஆறுதல் அடைவார்கள் – 2
– பாக்கியவான்கள்
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
அவர்கள் இரக்கம் பெறுவார்கள் – 2
இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள்
பாக்கியவான்கள்
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் – 2
– பாக்கியவான்கள்
சமாதானம் பண்ணூகிறவர்கள் பாக்கியவான்கள்
தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் – 2
நீதிக்காக துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது – 2
– பாக்கியவான்கள்
என்னமித்தம் உங்களை நிந்தித்து
துன்பப்படுத்தி பலவித தீமையான சொற்களை
உங்கள் பேரில் பொய்யாய் சொன்னால்
பாக்கியவான்கள்
பரலோகத்தில் உங்கள் பெலன்
மிகுதியாய் இருக்கும்
– பாக்கியவான்கள்