பாடல்
பாடுவேன் பரவசமாகுவேன்
Paaduvaen Paravasamaakuvaen
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்தையில்
அலைகடல் தடுத்து நடுவழி
விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை
என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்கையில்
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி
மகிழ்வித்த மகிபனையே
ஒன்றுமிலா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரை
சுரந்து தாகம் தீர்த்த தயவை
வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வானமன்னாவால்ஞானமாய் போஷித்த
காணாத மன்னா இயேசுவை