பாடல்
பாடுகின்ற பாட்டெல்லாம் பாட்டாகுமா
Paadukinta Paattellaam Paattakumaa
Sirkali Yesuprakasam
பாடுகின்ற பாட்டெல்லாம்
பாட்டாகுமா எங்கள் பரிசுத்த இயேசு
பாட்டுக்கு இணையாகுமா
இசைகின்ற இசையெல்லாம்
இசையாகுமா எங்கள்
இயேசுவின் இன்னிசைக்கு ஈடாகுமா
ஆவியோடும் கருத்தோடும்
பாடிடுவேன் இயேசு பாட்டு
பாவி மன பாரமெல்லாம்
பறந்திடும் அதை கேட்டு
தேவ மைந்தன் இயேசுப்பாட்டு
தீமைக்கெல்லாம் அது வேட்டு
தேவாதி தேவன் வந்து
வாசம் செய்யும் துதிப்பாட்டு
– பாடுகின்ற
சங்கீத சாரீரம் சரீர சந்தோஷம்
சரிகமபதநிச சுரமெல்லாம் செவி சுகம்
சரிநிசச …… பதநிச கரிநிச
ஆத்துமாவை உயிர்பிக்கும்
ஔஷதம் இயேசு கீதம்
அந்த பாட்டுக்கு எந்த பாட்டு
இவ்வுலகில் இணையாகும்
இயேசு பாட்டுக்கு எந்த பாட்டு
இவ்வுலகில் இணையாகும்
– பாடுகின்ற