நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Ottaththai Oti Mutikkanum

Fr. S. J. Berchmans

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

ஊழியம் நிறைவேற்றுணுமே

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி,தங்கச்சி) நீ

கர்த்தரையே முன் வைத்து

கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்

பிராணனை அருமையாய் எண்ணாமல் - 2

மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்

பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் - 2

– கர்த்தரையே

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்

இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் - 2

கண்ணீரோடும் தாழ்மையோடும்

கர்த்தர் பணி செய்து மடியணுமே - 2

– கர்த்தரையே

கிராமம் கிராமமாய் செல்லணுமே

வீடு வீடாய் நுழையணுமே - 2

கிருபையின் நற்செய்தி சொல்லனுமே

ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே - 2

– கர்த்தரையே