நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஓசன்னா கீதம் பாடிடுவேன்

Osannaa Geetham Paadiduvaen

Reegan Gomez

ஓசன்னா கீதம் பாடிடுவேன்

உன்னத தேவன் உந்தனுக்கே

துதிபலி ஸ்தோத்திரங்கள்

தூயவர் உமக்குத்தான்

வானம் பூமி படைத்தவரே

வாழ்த்தி உம்மை போற்றிடுவேன்

வல்லவரே நல்லவரே

ஆராதனை உமக்கே

– ஓசன்னா

ஜீவன் தந்து மீட்டவரே

ஜீவிக்கும் தெய்வம் நீர்தானையா

இரட்சகரே இயேசுநாதா

ஆராதனை உமக்கே

– ஓசன்னா

என்னைத் தேற்றும் நேசர் நீரே

எந்நாளும் என்னோடு இருப்பவரே

தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே

ஆராதனை உமக்கே

– ஓசன்னா