ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம்
Oruvarum Kiriyai Seyyakkoodaatha Iraakkaalam
Moses Rajasekar
ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம்
பார்வோனின் இருதய கடினம் போன்ற கற்காலம்
வருகின்ற காலம் இயேசு ராஜனின் பொற்காலம்
அவர் வருகிற நாளை
எதிர்ப்பார்த்திடுவோம் இக்காலம்
இராக்காலம் … இது இராக்காலம்
பொற்காலம் …. வருகுது பொற்காலம்
காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்குது
இந்த ஞாலம் தேவனை மறந்து கிடக்குது
ஏன் இந்த கோலம் மாறுமே உலகம்
இயேசு ராஜாவை அறிகின்ற காலம்
உள்ளம் ஏங்குது கண்ணீர் வடிக்குது
– இது இராக்காலம்
உலகம் நம்மை அசைக்க பார்க்குது
பல கலகங்கள் மூட்டி அழிக்க நினைக்குது
நாசமோ மோசமோ உயர்வோ தாழ்வோ
வறுமையோ வியாதியோ பசியோ பட்டினியோ
அன்பை பிரிக்குமோ தேவ உறவை பிரிக்குமோ
– இது இராக்காலம்
இயேசுவின் வருகை மிகவும் சமீபமே
ஆயத்தமுள்ளோர் பரலோகம் நிச்சயமே
மரணத்தை வென்றவர் மகிமையில் உதித்தவர்
சாத்தானின் சேனையை நொடியில் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார் தேவ மகிமையில் சேர்கிறார்
– இது இராக்காலம்
வருகிறார் இயேசு வருகிறார்
நியாயாதிபதியாக இயேசு வருகிறார்
இராஜாதி இராஜாவாய்
இயேசு வருகிறார் ! வருகிறார்
இயேசு வருகிறார் ! வருகிறார்