பாடல்
ஒரு சபையில் நிலைத்திரு
Oru Sapaiyil Nilaiththiru
Chandrasekaran
ஒரு சபையில் நிலைத்திரு
திரு சபையில் நிலைத்திரு
இயேசு வந்திடுவார்
தேவ சமூகத்தை விட்டு ஓடாதே
இயேசு சீக்கிரம் வருகின்றார்
தகப்பன் மானத்தைப் பாதுகாத்திட்ட
சேமைப் போல உண்மையாய் இரு
காமைப் போல சாபம் சுமந்து
சாத்தான் வழியில் நடக்காதே
அந்த காமின் வம்ச
வரலாற்றை நோக்கிப்பாரு
சாபமும் சஞ்சலமும் தான் முடிவு
– ஒரு சபையில்
அழைத்த அழைப்பில் நிலைத்திருந்து
ஆண்டவர் இயேசுவின் பணி செய்திடு
யூதாஸ் போல மாற நினைத்து
உன்னை வளர்த்த தகப்பனை
வாரி விடாதே
இதை அஞ்ஞானிகள்
தேடி ஓடுகின்றார்
நீயோ விசுவாசம் காத்துகொள்ளு
– ஒரு சபையில்
பணத்திற்காய் உன் சபையை விட்டு
விலகி ஓடிட நினைக்காதே பதவிக்காய்
பதவிக்காய் தாய் சபையை விட்டு
விலகி ஓடிட நினைக்காதே
துர் உபதேச கறைகளால்
வீழ்ந்திடாமல்
நித்திய ஜீவன்பெற போராடிடு
– ஒரு சபையில்