நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஊற்றப்பட வேண்டுமே

Oottappada Vaenndumae

ஊற்றப்பட வேண்டுமே

உன்னதத்தின் ஆவி

உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா

முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே

பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

எண்ணெய் அபிஷேகமே

என் தலையை நனைக்க

ஆவியால் நிரப்புமே

பாத்திரம் வழிந்தோடும்

நீச்சல் ஆழம் மூழ்கியே

நேசர் அன்பில் மகிழ

அக்கினி அபிஷேகம்

எந்தன் ஆவல் தீர்ந்திடும்

தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்

போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே

– எண்ணெய்

ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்

ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்

– எண்ணெய்

ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம்

தேவ புத்திரர் என முத்திரை போடும்

– எண்ணெய்