நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்

Oli Muka Vaasalil Oliyaay Iruppavar

Moses Rajasekar

ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்

வானத்திலிருந்து ஒளியாய் என்னைக் காண வந்தார்

என்னைக் கண்டதும் கட்டியணைத்தாரே

அவரின் மார்பில் சாய்ந்தவுடன் –

ஆறுதல் வந்ததே

என் துக்கங்கள் மறைந்ததே – (2)

தாயைப் போல தேற்றினார்

தந்தையைப் போல அணைத்திட்டார்

சிநேகிதனைப் போல என்னோடு பேசினார்

அவர் பேசும் பொழுதே

என் இதயம் ஏக்கமெல்லாம் நிறைவேறியது

அவர் பாதம் பணிந்தேன்

– ஒலி முக வாசலில்

போதகரைப் போல போதித்து நடத்தி

நான் நடக்க வேண்டிய

பாதையை கண்டித்துணர்த்தி

என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றீரே

அவரின் பாதைகள் எவ்வளவு அருமை

– ஒலிமுக வாசலில்