நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஓடு ஓடு விலகி ஓடு

Odu Odu Vilaki Odu

Fr. S. J. Berchmans

ஓடு ஓடு விலகி ஓடு

வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு

ஓடு ஓடு தொடர்ந்து ஓடு

இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

வேசித்தனத்திற்கு விலகி ஓடு

இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு

நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு

– ஓடு

சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு

அன்பு அமைதியைத் தினம் தேடு

தினம் தேடு நீ தினம் தேடு

– ஓடு

இளமை இச்சைகளை விட்டு ஓடு

தூய்மை உள்ளத்தோடு துதிபாடு

துதிபாடு நீ துதிபாடு

– ஓடு

உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு

பக்தி விசுவாசம் நாடித்தேடு

நாடித்தேடு நீ நாடித்தேடு

– ஓடு

வீணாய் ஓடவில்லை என்ற பெருமை

பெறணும் இயேசுவின் வருகையிலே

வருகையிலே இயேசு வருகையிலே

– ஓடு

சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி

பரிசு பெறும்படி பார்த்து ஓடு

பார்த்து ஓடு நீ பார்த்து ஓடு

– ஓடு

சிலை வழிபாட்டை விட்டு ஓடு

சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு

தினம் தேடு நீ தினம் தேடு

– ஓடு