பாடல்
நித்திய ராஜா நிர்மலா நாதா
Niththiya Raajaa Nirmalaa Naathaa
என் மன ராஜ்யத்தில்
என்றும் அரசாளுகின்ற
ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
இயேசு மகா ராஜாவுக்கு ஸ்தோத்திரம்
கண்ணயர்ந்த வேளையிலும்
கண்ணிமைப் போல் காத்தவரே
கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
கண் விழித்த வேளையிலும்
கண் மேல் உம் கண் வைத்து
கருத்தாய் போதித்தவர் ஸ்தோத்திரம்
– என் மன
இப்பகல் வேளையிலும்
எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்
இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
உம்முடனே நான் இணைய
என்னுடனே நீர் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காக ஸ்தோத்திரம்
– என் மன