பாடல்
நித்திய கன்மலை எனக்காய்ப்
Niththiya Kanmalai Enakkaayp
நித்திய கன்மலை எனக்காய்ப் - பிளந்தது,
நேயமாய் மறைந்துய்குவேன்
சுத்த உதிரமும் நீரும் வடிந்தது
தூயன் விலாவினின்று - அதால்
சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே
– நித்திய
என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை - தினம்
சிந்துகினுங் கண்ணீர், ஏதேது
செய்கினும் தீங்கு நீங்குவதில்லை
– நித்திய
கொண்டுவரக் கையிலொன்று
மில்லை, உன்
குருசுடன்றான் ஒன்றினேன் - குருதி
கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்
கோவே; அல்லாதுய்ந்திடேன்
– நித்திய
ஜீவனிருக்கையில், சாவில் கண்
மூடுகையில்,
தெரியாவுலகிற் செல்கையில் - ஒளி
மேவு பத்ராசன மீதுனைக் காண்கையில்
விரைந்துனில் மறைந்துய்குவேன்
– நித்திய