நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நித்தம் நித்தம் உம்மை நான்

Niththam Niththam Ummai Naan

Pastor K. S. Wilson

நித்தம் நித்தம் உம்மை நான்

நினைத்து நினைத்து பார்க்கிறேன்

நீர் செய்த நன்மை எண்ணி

ஓயாமல் துதிக்கிறேன்

நன்றி… நன்றி

நன்றி… நன்றி

தாயைப் போல தேற்றி என்னை

அரவணைத்து மகிழ்கிறீர்

தந்தையைப் போல தோள்களிலே

அனுதினமும் சுமக்கிறீர்

– நன்றி…

கடந்து வந்த பாதைகளை

நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்

கண்ணீரோடு நன்றி சொல்லி

ஓயாமல் துதிக்கிறேன்

– நன்றி…

தாயின் கருவில் தோன்று முன்னே

முன் குறித்த தெய்வமே

நினைப்பதற்கும் மேலாய் என்னை

ஆசீர்வதித்த தெய்வமே

– நன்றி…