நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா

Nirappungappaa Ennai Nirappungappaa

Bishop Gnanaprakasam

நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா

பரலோக தைலம் ஊற்றி நிரப்புங்கப்பா

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா

நுகங்கள் முறியணும் நிமிர்ந்து நடக்கணும்

சாபங்கள் மாறணும் சமாதானம் அடையணும்

சாபங்கள் மாறணும் சமாதானம் அடையணும்

– நிரப்புங்கப்பா

பாத்திரம் நிரம்பணும் பரவசம் அடையணும்

பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும்

பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும்

– நிரப்புங்கப்பா

ஆவியில் நிறையணும் அதிகமாய் ஜெபிக்கணும்

அன்னிய பாஷையில் பாடித் துதிக்கணும்

அன்னிய பாஷையில் பாடித் துதிக்கணும்

– நிரப்புங்கப்பா