நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நினிவேக்கு இரங்கினீரே

Ninivaekku Irangineerae

Pastor K. S. Wilson

நினிவேக்கு இரங்கினீரே – என்

இலங்கைக்கு இரங்கிடுமே – உம்

இரக்கத்தை காட்டியே – என்

இலங்கைக்கு இரங்கிடுமே – உம்

இரக்கத்தை காட்டியே

என் ஜனத்துக்கு இரங்கிடுமே

– நினிவேக்கு

வருடங்கள் தோரும்

எங்கள் தேசத்தில்

யுத்த சத்தங்கள் போதுமே

வருடங்கள் தோரும்

எங்கள் தேசத்தில்

இரத்தம் சிந்துதல் போதுமே

என் ஜனங்களுக்காக நீர் சுமந்த

சிலுவையை நினைத்திடுமே

என் ஜனங்களுக்காக நீர் சிந்தின

திரு இரத்தம் நினைத்திடுமே

– நினிவேக்கு

எங்கள் ஆதி பிதாக்கள்

செய்த பாவங்கள்

தயவாய் மன்னியுமே – 2

சிலை நமஸ்காரம் பில்லி சூனியம்

பாவங்களை மன்னித்திடுமே

சிலை நமஸ்கார இன துவேஷங்கள்

பாவங்களை மன்னித்திடுமே

– நினிவேக்கு

உந்தன் சேவை செய்த

ஊழியரை

துன்பம் செய்து தூசித்தோமே – 2

அந்த சாபம் யாவும் நீங்க செய்து

அருள் மாரி ஊற்றுமையா – 2

– நினிவேக்கு