பாடல்
நெஞ்சிலே நிறைந்தவரே
Nenjilae Nirainthavarae
Chandrasekaran
நெஞ்சிலே நிறைந்தவரே
துதிக்கிறேன் நினைவில்
நிறைந்தவரை துதிக்கிறேன்
நின்றாலும் நடந்தாலும்
உமது நினைவுதான்
அமர்ந்தாலும் படுத்தாலும்
உமது நினைவுதான்
நான் வலது பக்கம்
இடதுபக்கம் சாயும்போது – 2
இதுதான் வழியென்று காட்டுகின்றீர்
ஸ்தோத்திரம் என் வழிகாட்டியே
ஸ்தோத்திரம் என் துணையாளரே
– நெஞ்சிலே
என் கால்கள் கல்லில் இடறாமல்
பாதுகாக்க உம் – 2 தூதர்களை
எனக்காய் அனுப்புகின்றீர்
ஸ்தோத்திரம் என் அடைக்கலமே
ஸ்தோத்திரம் என் புகலிடமே
– நெஞ்சிலே
நீர் நேசிக்கின்ற பாதைகளை
எனக்கு காட்டி – 2
என் மேல் உம் கண்கள்
வைத்து நடத்துகின்றீர்
ஸ்தோத்திரம் என் மேய்ப்பரே
ஸ்தோத்திரம் என் மீட்பரே
– நெஞ்சிலே