பாடல்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு
Neethiyin Paathaiyil Jeevan Unndu
Sirkali Yesuprakasam
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு
அந்த பாதையில் மரணமில்லை
மரணமேயில்லை
குணசாலியான ஸ்திரி தன்
புருஷனுக்கு கிரீடமே கிரீடமே
மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள ஸ்திரி
பன்றியின் மூக்கில் உள்ள
பொன் மூக்குத்தி
– நீதியின்
புத்தியுள்ள ஸ்திரி தன்
வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லா ஸ்திரியோ அதை
இடித்து போடுகிறாள்
புத்தியில்லா ஸ்திரியோ அதை
இடித்து போடுகிறாள்
– நீதியின்
சண்டைக்காரியோடே ஒரு பெரிய
வீட்டில் குடியிருப்பதை பார்க்கிலும்
வீட்டின் மேல் மூலையில்
தங்கியிருப்பது நல்லது
வீட்டின் மேல் மூலையில்
தங்கியிருப்பது நல்லது
– நீதியின்
குணசாலியான ஸ்திரியை
கண்டுபிடிப்பவன் யார்
அவள் விலையோ முத்துக்களை
பார்க்கிலும் உயர்ந்தது
அவள் விலையோ முத்துக்களை
பார்க்கிலும் உயர்ந்தது
– நீதியின்