நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீதியில் நிலைத்திருந்து

Neethiyil Nilaiththirunthu – Um

Fr. S. J. Berchmans

நீதியில் நிலைத்திருந்து – உம்

திருமுகம் நான் காண்பேன்

உயிர்த்தெழும் போது – உம்

சாயலால் திருப்தியாவேன்

தேவனே, நீர் என் தேவன்

அதிகாலமே தேடி வந்தேன்

நீரின்றி வறண்ட நிலம்போல்

ஏங்குகிறேன் தினம் உமக்காய்

அல்லேலூயா ஓசன்னா

அல்லேலூயா ஓசன்னா

அல்லேலூயா ஓசன்னா

அல்லேலூயா ஓசன்னா (4)

ஜீவனை விட உம் அன்பு

அது எத்தனை நல்லது

புகழ்ந்திடுமே, என் உதடு

மகிழ்ந்திடுமே, என் உள்ளம்

… அல்லேலூயா

உயிர்வாழும் நாட்களெல்லாம்

உம் நாமம் சொல்லித் துதிப்பேன்

அறுசுவை உண்பது போல

திருப்தியாகும் உன் ஆன்மா

… அல்லேலூயா

படுக்கையிலே உம்மை நினைப்பேன்

இராச்சாமத்தில் தியானம் செய்வேன்

துணையாளரே, உம் நிழலை

தொடர்ந்து, நடந்து வருவேன்

… அல்லேலூயா