பாடல்
நீரில்லா ஆராதனை ஆராதனையல்ல
Neerillaa Aaraathanai Aaraathanaiyalla
Ravi Bharath
நீரில்லா ஆராதனை ஆராதனையல்ல
நீரில்லா என் வாழ்க்கை ஒரு
நல்வாழ்க்கையும் அல்ல
ஆராதிக்கும் போது உம்
அங்கீகாரம் வேண்டும்
நான் பாடல் பாடும் போது உம்
பிரசன்னமும் வேண்டும்
உம்மை பார்க்கும் போது நீர்
எம்மை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும் போது நீர் மனமுருகி
மனமிறங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல்
மாற வேண்டும்
– நீரில்லா
வைடூரிய வேண்டாம் உம்
வார்த்தை ஒன்றே போதும்
கோடாகோடி வேண்டாம் உம்
கிருபை மட்டும் போதும்
சொந்தம் பந்தம் வேண்டாம் உம்
சன்னிதானம் போதும்
நீர் மீண்டும் வரும் போது உம்
திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும்
நான் உமதருகில் என்றும்
வாழ வேண்டும்
– நீரில்லா