பாடல்
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
Neerae Vali Neerae Saththiyam Neerae Jeevan
Ravi Bharath
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும்
மெய் நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தானையா
கல்லும் அல்ல மண்ணும் அல்ல
கல்லான ஓர் சிற்பமல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால்
நீர் தானையா
ரூபமும் உமக்கில்லை
சொரூபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே
உண்டானது எல்லாம்
உம்மாலே உண்டானது
உம் நாம மகிமைக்கே உண்டாக்கினீர்
படைப்பு தெய்வமல்ல
பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளையா
எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே
வானம் உம் சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி