பாடல்
நீர் செய்த உபகாரங்கள்
Neer Seytha Upakaarangal
Reegan Gomez
நீர் செய்த உபகாரங்கள்
எண்ணி முடியாதையா
நித்தம் நன்றி சொல்லி மகிழ்வேன்
உம் நாமம் துதித்திடுவேன்
வழியோரம் கிடந்தேன் ஐயா
என்னைத் தேடி வந்தீரையா
பிழைத்திடு என்றீரையா – உம்
ஜீவனைத் தந்தீரையா
இயேசு ராஜா நன்றி ராஜா
இயேசு ராஜா நன்றி ராஜா– 2
– நீர் செய்த
மீட்பென்னும் ஆடை தந்தீர்
எண்ணெயால் அபிஷேகித்தீர்
அப்பா உம் சமூகத்திலே – என்னை
எப்போதும் மகிழச் செய்தீர்
இயேசு ராஜா நன்றி ராஜா
இயேசு ராஜா நன்றி ராஜா– 2
– நீர் செய்த
அநாதி சிநேகத்தினால்
அப்பா நீர் நேசித்தீரே
காருண்ய கரங்களினால் – என்
கண்ணீரை துடைத்தீரே
இயேசு ராஜா நன்றி ராஜா
இயேசு ராஜா நன்றி ராஜா– 2
– நீர் செய்த