நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் செய்த நன்மைகள்

Neer Seytha Nanmaikal

Reegan Gomez

நீர் செய்த நன்மைகள்

நினைத்து நினைத்து நான்

நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன்

கொடிய என் குணம் மாற்றினீர்

கோடிக் கோடி நன்றி ஐயா

செடியே உம்மில் இணைந்த

கொடியாய் என்னை மாற்றினீர்

– என் தேவா

– நீர் செய்த

கல்லான இதயமதை

இல்லாமல் போகச் செய்தீர்

கனிவுள்ள இதயம் தந்தீர்

கர்த்தாவே உம்மை துதிப்பேன்

– என்றென்றும்

– நீர் செய்த

என் பாவ தோஷமெல்லாம்

சிலுவையில் தீர்த்தீரையா

சந்தோஷம் பொங்குதையா

சங்கீதம் பிறந்ததையா– இந்நாளில்

– நீர் செய்த

ஒன்றுமில்லா ஏழை என்னை

கண்ணோக்கி பார்த்தீரையா

என்றும் மாறா உந்தன் அன்பால்

அணைத்துக் கொண்டீரையா– என் ராஜா

– நீர் செய்த