பாடல்
நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
Neer Seytha Athisayam Aayiram Unndu
Premji Ebenezer
நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
நீர் செய்த நன்மைகள் எண்ணில்
அடங்காமல் உள்ளம் பொங்குதையா
வெறுமை என் வாழ்வினையே
ஒளி மயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே
ஜோதிகள் என் தெய்வமே
எல்லா நன்மைக்கும் முற்றும் காரணரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே
கார் மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வந்தங்கள் நிலைப் பெயர்ந்தாலும்
ஜலங்கள் கொந்தளித்தாலும்
பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்
தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரேவேல் என் தேவன் நம்முடனே
யாகோபின் நம் அச்சாரமே
– ஜோதிகள்