நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் மாத்திரம் இல்லையென்றால்

Neer Maaththiram Illaiyental

Lucas Sekar

நீர் மாத்திரம் இல்லையென்றால்

மண்ணாய் போயிருப்பேன்

நீர் மாத்திரம் இல்லையென்றால்

பெயரற்றுப் போயிருப்பேன்

என் மீது கிருபை வைத்ததினால்

உயிரோடு இருக்க செய்தீரே

என் மீது கிருபை வைத்ததினால்

உயரத்தில் ஏற செய்தீரே

என் தகப்பனே என் இயேசுவே

உம்மை தொழுகிறோம்

உந்தன் நாமத்தை (2)

இம்மைக்கும் மறுமைக்கும் தகப்பனே

என்றென்றும் கைவிடாத நேசரே (2)

காணாமல் போன ஆட்டினைப்போல

திசை தெரியாமல் அலைந்தேனே (2)

முட்களிலும் கற்களிலும்

காயப்பட்டு போனேனே

என்னையும் தேடி வந்தீரய்யா

ஜீவனை கொடுத்து மீட்டீரே

– என் தகப்பனே

துடைத்துப் போட்ட கந்தயைப் போல

குப்பையில் நானும் கிடந்தேனே (2)

நாற்றமெல்லாம் நீக்கினீரே

வாசனையாய் மாற்றினீரே

ராஜாக்களோடு அமர செய்து

பிரபுக்கள் மத்தியில் உயர்த்தினீரே

– என் தகப்பனே

உடைந்த சிதைந்த பாத்திரம் போல

விரும்புவரற்று கிடந்தேனே (2)

சிதைந்த என்னையும் தூக்கினீரே

கன்மலை மேலே நிறுத்தினீரே

உமது காருண்யம் பெரியவனாய்

உமது கிருபையால் உயர்த்தினீரே

– என் தகப்பனே