பாடல்
நீ விசுவாசித்தால் தேவனின்
Nee Visuvaasiththaal Thaevanin
Pastor K. S. Wilson
நீ விசுவாசித்தால் தேவனின்
மகிமையைக் காண்பாய்
தண்ணீர் எல்லாம் ரசமாகிடும்
தாகம் எல்லாம் தீர்க்கப்படும்
செங்கடல் பிளந்திடும்
எரிகோ அகன்றிடும்
விசுவாசித்தால் எல்லாம் மாறிடும்
– நீ
கஷ்டங்கள் நீங்கிடும்
கவலைகள் மாறிடும்
விசுவாசித்தால் எல்லாம் மாறிடும்
– நீ
வியாதிகள் நீங்கிடும்
தொல்லைகள் மாறிடும்
விசுவாசித்தால் எல்லாம் மாறிடும்
– நீ
வெறுமையான பாத்திரம்
நிரம்பி வழிந்திடும்
விசுவாசித்தால் எல்லாம் மாறிடும்
– நீ