பாடல்
நீ துதிக்காமல் அற்புதங்கள் நடக்காது
Nee Thuthikkaamal Arputhangal Nadakkaathu
Chandrasekaran
நீ துதிக்காமல் அற்புதங்கள் நடக்காது
நீ ஜெபிக்காமல்
அதிசயங்கள் நடக்காது
துதியின் மத்தியில் வாசம் செய்திடும்
நம் தேவாதி தேவன் இயேசு – 2
பட்டயத்தினாலோ ஈட்டியினாலோ
கர்த்தர் இரட்சிப்பவர் அல்ல அல்ல
இராட்சத கோலியாத்தை
கொன்ற தாவீது
வாயைத்திறந்து துதித்தான் ஐயா
– நீ துதிக்காமல்
பலவானைக் கட்டிட
பகைஞனை வென்றிட
துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே
பகைவன் உடைமையை
பறித்து வென்றிட
துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே
– நீ துதிக்காமல்
பலவிதமான ஜாதி பிசாசுகள்
உபவாச ஜெபத்தால்
உடைந்தே போகுமே
ஆவியில் மரித்தவர்கள்
துதி செய்யமாட்டார்கள்
உயிரோடிருக்கும்
நீ எழுந்து துதிதிடு
– நீ துதிக்காமல்