நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீ எழும்பும் வரையிலும்

Nee Elumpum Varaiyilum

Lucas Sekar

நீ எழும்பும் வரையிலும்

கிராமங்கள் பாழாய் கிடக்குதே

எழும்பிடு வாலிபரே

எழும்பிடு கன்னியரே (2)

கர்த்தரின் வருகையோ

மிகவும் சமீபமே

நியாயத்தீர்ப்போ

நெருங்கி வருகுதே

இன்னும் காலத்தாமதமேனோ

எழும்பிடு வாலிபரே

இன்னும் காலத்தாமதமேனோ

எழும்பிடு கன்னியரே

– நீ எழும்பும்

இமய முதல் குமரி வரை

ஜெப தூபம் ஏற்றிடுவோம்

நதியளவு கண்ணீர் விட்டு

கதறி நாமும் ஜெபித்திடுவோம் (2)

– இன்னும்

கோடி கோடி மாந்தர்களிங்கே

நரகத்தின் பாதையிலே

அவர்களின் மீட்புக்காக

யாரிங்கே போவது (2)

– இன்னும்

இந்தியாவின் எழுப்புதலை

காணும் வரை ஜெபித்திடுவோம்

கர்த்தரே தெய்வம் என்று

நாவு யாவும் முழங்கணுமே (2)

– இன்னும்

எழும்பு எழும்பு எழும்பு

வல்லமை தரித்து எழும்பு,

எழும்பு எழும்பு எழும்பு

உம் தூக்கத்தை விட்டு எழும்பு

எழும்பு நீ எழும்பு

எழும்பு நீ எழும்பு(2)