நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது
Narampu Kooda Yesuvukku Nanti Solluthu
Moses Rajasekar
நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது – என்
என் எலும்பு கூட இயேசுக்காய் நிமிர்ந்து நிற்குது
வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது
என் உயிரே இயேசுவை என்று சொல்லுது
கண்ணீரோடு கண்கள் அவரை
நோக்கிப் பார்க்குது – என்றும்
நன்மை செய்த நல்லவருக்கு நன்றி சொல்லுது
என் முழங்கால்கள் மண்டியிட்டு
தினமும் ஜெபிக்குது – 2
என் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார்
என்று நம்புது என்
– நரம்பு கூட
ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது – தினம்
நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது
என் இதயமோ இரவும் பகலும் விழித்திருக்குது
என் உறவே என் மறைவிடமே
என்று சொல்லுது
– நரம்பு கூட
ஜீவன் தந்த தேவனுக்கே நன்றி கூறுவேன்
என் ஆவி ஆத்துமா சரீரம் முழுதும்
அர்ப்பணிக்கிறேன்
இலக்கை நோக்கி ஜீவபயணம்
தொடர்ந்து ஓடுவேன் பரிசுத்தமாய்
வாழ்ந்து தேவ ஊழியம் செய்வேன்
– நரம்பு கூட