பாடல்
நன்றி சொல்ல நான் மறப்பேனோ
Nanti Solla Naan Marappaeno
Reegan Gomez
நன்றி சொல்ல நான் மறப்பேனோ
என் ராஜாவே உமக்கு நன்றி
தெய்வமே உமக்கு நன்றி
நன்றி இயேசைய்யா
நன்றி இயேசைய்யா
பாவத்தின் சேற்றில் கிடந்த என்னை
தூக்கி எடுத்தீரே
உம் திரு ரத்தத்தினால்
என் பாவம் போக்கிவிட்டீர்
– நன்றி சொல்ல
எனது மீறுதலால்
காயங்கள் ஏற்றுக்கொண்டீர்
உள்ளம் உருகுதையா
உம் அன்பை நினைக்கையிலே
– நன்றி சொல்ல
சிலுவை சுமந்தவரே
சீயோனின் நாயகனே
சிலுவை கொடி ஏந்துவேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்
– நன்றி சொல்ல
மீண்டும் வருபவரே
என் ஆத்ம நேசரே
உமக்காய் காத்திருப்பேன்
ஆயத்தமாகிடுவேன்
– நன்றி சொல்ல