பாடல்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு
Nanti Nanti Nanti Nanti Nanti Umakku
Moses Rajasekar
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி – 2
நன்றி சொல்ல வார்த்தைகளில்லை
நாதன் செய்த நன்மைகட்கு
கோடி கோடி நன்றியய்யா – 2
நாடி வந்தோம் அற்புதம் ஐயா – நாங்கள் – 2
நாடி வந்தோம் அற்புதம் ஐயா
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே – 2
பேர் சொல்லி அழைத்தவர் நீரே – 2
என்னை மகிமைப்படுத்துப்பவர் நீரே – 2
– நன்றி
காலையும் நீரே என் மாலையும் நீரே
பொழுதும் நீரே என் விடியலும் நீரே
நாட்களை எண்ணுபவர் நீரே
என்னை நடத்தி செல்பவரும் நீரே – 2
– நன்றி
இரக்கமும் உருக்கமும் கிருபையும் நீரே
துருகமும் கேடகமும் அற்புதம் நீரே
மகிமைக்கும் பாத்திரர் நீரே – 2
மாறாத அபிஷேகம் நீரே – 2
– நன்றி