பாடல்
நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா
Namma Yesu Raajaa Katkum Pangalaa
Moses Rajasekar
நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா
அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்
கொள்ளையன் அங்கில்லே
தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்
செக்போஸ்ட் அங்கில்லே
கொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லே
நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா
– நம்ம
நிலையில்லா உலக வீட்டின்
பாடுகள் அங்கில்லே தேவன் கட்டிய
நித்திய வீடு நமக்கு சொந்தமே
ஏழையுமில்லே பணக்காரணுமில்லே – அங்கு
எல்லாமே இன்ப மயம் தான் – 2
– நம்ம
ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு
பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடு
பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே
இயேசுவோடு வாழ்ந்திருப்போம் – அங்க
– நம்ம