நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நல்லவர் நீர் தானே எல்லாம் நீர் தானே

Nallavar Neer Thaanae Ellaam Neer Thaanae

Fr. S. J. Berchmans

நல்லவர் நீர் தானே

எல்லாம் நீர் தானே

என் நேசரே நன்றி

இம்மானுவேல் நன்றி

இரட்சகரே நன்றி

இயேசு ராஜா நன்றி

எனது ஆற்றல் நீர் தானே

எனது பெலனும் நீர் தானே

என் கீதம் என் பாடல் எல்லாமே நீர் தானே

– என் நேசரே – நல்லவர்

நெருக்கத்தில் இருந்து நான் கூப்பிட்டேன்

கர்த்தர் பதில் தந்தீர்

வேதனையில் கதறினேன்

விடுதலை காணச் செய்தீர்

– என் நேசரே - நல்லவர்

நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல்

என் இதயக் கூடாராத்தில்

(என்) கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது

பராக்கிரமம் செய்யும்

– என் நேசரே - நல்லவர்