பாடல்
நல்ல சமாரியனே எங்கள்
Nalla Samaariyanae Engal
Pastor K. S. Wilson
நல்ல சமாரியனே எங்கள்
நல்ல சமாரியனே
அனாதையாக இருந்த என்னை
தேடிவந்த என் தெய்வமே
உலகம் மறந்தாலும்
நீர் என்னை மறக்கவில்லை
கேட்பாரற்று கிடந்த என்னை
உயர்த்தி வைத்த என் தெய்வமே
– நல்ல
பாவத்தில் இருந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
பாவங்கள் யாவையும்
மன்னித்து மறந்து
புதிய மனிதனாய் மாற்றினீரே
– நல்ல
கண்ணீரின் பாதையிலும்
கஷ்டத்தின் நேரத்திலும்
கண்ணீரைத் துடைத்து
காயங்கள் ஆற்றி
வாழவைத்த என் தெய்வமே
– நல்ல