நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நல் மீட்பர் பட்சம் நில்லும்

Nal Meetpar Patcham Nillum

நல் மீட்பர் பட்சம் நில்லும்

ரட்சணிய வீரரே

ராஜாவின் கொடியேற்றி

போராட்டம் செய்யுமே

சேனாதிபதி இயேசு

மாற்றாரை மேற்கொள்வார்

பின் வெற்றி கிரீடம் சூடி

செங்கோலும் ஓச்சுவார்

நல் மீட்பர் பட்சம் நில்லும்

எக்காளம் ஊதுங்கால்

போர்க்கோலத்தோடு சென்று

மெய் விசுவாசத்தால்

அஞ்சாமல் ஆண்மையோடே

போராடி வாருமேன்

பிசாசின் திரள்சேனை

நீர் வீழ்த்தி வெல்லுமேன்

நல் மீட்பர் பட்சம் நில்லும்

எவ்வீர சூரமும்

நம்பாமல் திவ்விய சக்தி

பெற்றே பிரயோகியும்

சர்வயுதத்தை ஈயும்

கர்த்தாவை சாருவீர்

எம்மோசமும் பாராமல்

முன் தண்டில் செல்லுவீர்

நல் மீட்பர் பட்சம் நில்லும்

போராட்டம் ஓயுமே

வெம்போரின் கோஷ்டம் வெற்றி

பாட்டாக மாறுமே

மேற்கொள்ளும் வீரர் ஜீவ

பொற் கிரீடம் சூடுவார்

விண்லோக நாதரோடே

வீற்றரசாளுவார்.