நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நேற்று இன்று நாளை மாறாதவரே

Naettu Intu Naalai Maaraathavarae

Ravi Bharath

நேற்று இன்று நாளை

மாறாதவரே

காலம் மாறினாலும்

மாறாதவரே

வாக்குத்தத்தம் கொடுத்தார்

அதை நிறைவேற்றிடுவார்

நம்மை போல அல்ல

அவர் கண்டதையும் சொல்ல

சொல்வதெல்லாம் உண்மை

அவர் செய்வதெல்லாம் நன்மை

பொய்கள் கிடையாது

அவர் செய்கை புரியாது

– நேற்று

தாழ்பாழ்களை முறித்தார்

வெண்கல கதவினை உடைத்தார்

என்றும் அதை செய்வார்

உம்மை விடுவித்து காப்பார்

– நேற்று

பாவம் நீங்கி போனதே

வாழ்வில் விடுதலை வந்ததே

செய்ததெல்லாம் அவரே

இன்றும் அதை செய்வாரே

– நேற்று