நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நேசரின் பாதம் அமர்ந்து நான் ஜெபிக்கையிலே

Naesarin Paatham Amarnthu Naan Jepikkaiyilae

Moses Rajasekar

நேசரின் பாதம் அமர்ந்து

நான் ஜெபிக்கையிலே

துன்பம் மறைந்து போகும் என் வாழ்வில்

இன்பம் கலந்து வரும் அற்புதம் நடக்கும்

என் வாழ்வில் அதிசயம் பிறக்கும் – 2

– .நேசரின் பாதம்

யோபை போல புடமிட்டாலும்

இயேசுவே நீர்தான் என் தெய்வம் – 2

அன்னாளைப் போல நிந்தனை வந்தாலும் – 2 –

இயேசுவே நீர்தான் என் தெய்வம்

இயேசுவே நீர்தான் என் தெய்வம்

– நேசரின் பாதம்

சிங்கத்தின் குகை என் தங்கும் வீடானாலும் –

இயேசுவே நீர் தான் என் தெயவம் – 2 என்

அங்கத்தின் உறுப்புக்கள் உருவிழந்தாலும்

இயேசுவே நீர்தான் என் தெய்வம்

இயேசுவே நீர்தான் என் தெய்வம்

– நேசரின் பாதம்

வானாந்திர பாதை வறண்ட என் ஆத்மா

ஆனாலும் நீர் தான் என் தெய்வம் – 2

இனிய கானம் இசைதனை தந்த

பாட வைக்கும் என் தெய்வம்

பாட வைக்கும் என் தெய்வம்– 2