நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும்

Naatkal Neykiravan Erikira Naadaavilum

Moses Rajasekar

நாட்கள் நெய்கிறவன் எரிகிற

நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ

நாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக்

காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ

ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான் –

உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான்

இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடு – 2

உன்னத தேவன் மறைவை நோக்கி

ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2

– நாட்கள்

ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே – நீ

ஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதே – 2

காடு மேடுகள் கரடு பள்ளங்கள் – 2

தவறும் இடறும் கவனம் தேவை

ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2

– நாட்கள்

வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்

ஆனதால் – உன்

காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடு

காலம் செல்லாது இனி வாழ்வும் நில்லாது

எழுந்திடு திருந்திடு இயேசுவண்டை

ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2

– நாட்கள்